கொரோனா 2 ஆம் அலையை எதிர்நோக்கி காத்திருங்கள்... வலுக்கும் எச்சரிக்கை!!
அடுத்த ஆண்டும் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை ஏற்படலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் ஊரடங்கில் முடங்கி கிடந்தது. ஆனால் நிலைமை சற்று மாறி தற்போது இய்ல்பு நிலை திரும்பி வருகிறது. தமிழகத்தை பொருத்த வரையில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது முற்றிலுமாக கட்டுக்குள் வர இன்னும் 3 மாத காலங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை 2021 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஏற்படலாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆண்டு மத்தியில் தான் இந்தியா முழுவதும் கொரோனா குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.