ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (15:26 IST)

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேரள வீரருக்கு நிவாரணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேரள விமானப் படை வீரர் பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது இதில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்  ராவத்  அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமான படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்,ஹெலிகாப்டரின் விமானி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் தற்போது,குன்னூர் வெலிங்டன் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். வருணை மீட்பு படையினர் மீட்கும்  போது அவர்  எண்பது சதவீத தீக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேரள விமானப் படை வீஅர் பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். மேலும், பிரதீப் தந்தையில்ன் சிகிச்சைக்கு ரூ.3 லட்சமும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.