8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா? ராகுல் காந்தி அதிர்ச்சி!
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நடைபயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவாவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியினர் 11 பேர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் இந்த 11 பேரில் தற்போது 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தால் காங்கிரஸ் கட்சியில் அம்மாநிலத்தில் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கோவா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் அவர்களும் அந்த 8 பேர்களில் ஒருவர் என்பது ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது