திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (13:10 IST)

இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்? – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் காங்கிரஸின் முன்னிலை ஒரு திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மை அமைக்க 35 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் தற்போது 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜகவை காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் வீழ்த்தினால் காங்கிரஸ்க்கு அது பெரும் திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K