வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:34 IST)

வேணாம்.. எல்லை மீறி போறீங்க! – கைலாஷ் மானசரோவரில் சீனா ஏவுகணை தளம்!

சமீப காலமாக இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுறுவி வரும் சீன ராணுவம் இந்தியாவின் புனித தலமான மானசரோவரில் ஏவுகணை தளத்தை அமைத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு இந்திய – சீன படைகளிடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலில் இருதரப்பினரும் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான மோதல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்னர் பாங் ஜோ ஏரி அருகே சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் அவர்களை விரட்டியடித்துள்ளது.

இந்நிலையில் நான்கு மதத்தை சேர்ந்தவர்களின் புனித தலமாக விளங்கும் கைலாஷ் – மானசரோவர் பகுதியின் அருகே உள்ள ஏரிக்கு அப்பால் சீனா ஏவுகணை தளம் அமைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்து மத கடவுளான சிவன் – பார்வதி ஆகியோர் வாழும் இடமாக நம்பப்படும் கைலாஷ் மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சீனா அந்த பகுதியில் ஏவுகணை தளம் அமைத்துள்ளது இந்தியாவை அச்சுறுத்தவும், அதன் மத நம்பிக்கைகளை அவமதிக்கவும் செய்யப்படும் செயலாக கருதப்படுகிறது.