புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2024 (16:52 IST)

பிணத்துடன் உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் ஆகாது: சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பிணத்துடன் உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் ஆகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தில் தலித் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக புகார் வந்தது. இதையடுத்து, போலீசார் அந்த சிறுமியை தேடினர். அப்போது, காட்டு பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு விட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், சிறுமியின் வீட்டு அருகே வசித்த நீல் சந்து என்பவரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியை பலமாக தாக்கியதில், அவர் இறந்து விட்டதாகவும், அதன் பின்னர் சிறுமியின் சடலத்துடன் நீல் சந்து மற்றும் அவரது நண்பர்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பில், "இறந்த உடலுக்கு கண்ணியமும், நியாயமான அணுகுமுறையும் கொடுக்கப்பட வேண்டும்" என்ற கருத்தில் வேறுபாடு இல்லை. ஆனால், அதே நேரத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவின்படி, பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டம் என்பது உயிருடன் இருக்கும் போது மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் கூறியது.


Edited by Siva