வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:19 IST)

மீண்டும் விக்ரம் லேண்டரை விண்ணில் செலுத்த திட்டமா?

விக்ரம் லேண்டரை மீண்டும் அனுப்புவது விவாதத்திற்குட்பட்டது, ஆனால் விக்ரம் லேண்டரை இனி பயன்படுத்த முடியாது என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2, கடந்த 7 ஆம் தேதி நிலவின் மேற்பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் எந்த சேதமும் இல்லாமல் நிலவின் மேற்பகுதியில் சாய்ந்து கிடக்கிறது என கண்டறிந்தனர். பின்பு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.  
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாள் மட்டுமே என்பதால் இஸ்ரோ நாசாவின் உதவியை நாடியும் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், எந்த முயற்சிகளும் பல கொடுக்கவில்லை. விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் முடிந்ததும்விட்டது. 
 
இந்நிலையில், விக்ரம் லேண்டரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்புவது குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டதாக  மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, விக்ரம் லேண்டரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்புவது குறித்து விவாதத்திற்குட்பட்டது. ஆனால், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டதால் இனி அதை பயன்படுத்த முடியாது. சந்திரயான் 2 முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் இயங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.