வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (12:39 IST)

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்து கொள்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்!

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தேவையற்ற சட்ட விரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. என்னிடம் நல்லபடியாக பழகுபவர்களுக்கு மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன்.

ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ போல செயல்படுகிறார். பல முதலமைச்சர்களை பார்த்துள்ளேன். ஆனால் ஜெகன் மோகன் போல மோசமான ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை” என கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்து வருவதால் இரு கட்சி தொண்டகளிடையேயும் பல்வேறு விரோத போக்குகள் ஏற்பட்டு வருகின்றன.