1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (14:39 IST)

நிதியமைச்சர் உட்பட 10 அமைச்சர் பொறுப்பு.. சந்திரபாபு நாயுடு பிடிவாதம்?

Chandra Babu Naidu
நிதியமைச்சர் உட்பட 10 அமைச்சர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ்குமாரும் சில முக்கிய துறைகளை குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும், குறிப்பாக உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. அதேபோல் வெளியுறவு, சட்டம், தகவல் தொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளையும் தன்வசமே வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.
 
வேளாண்துறையை, குமாரசாமி வலியுறுத்தும் நிலையில், அவர் கட்சிக்கு வேளாண்துறை அல்லது கூட்டுறவுத்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு முக்கிய துறையுடன் கூடிய கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்குவதும் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தகவல் தொழில்நுட்பம், சட்டம், தொழில் போன்ற துறைகள் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva