புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (17:04 IST)

மத்திய அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: அதிரடி அறிவிப்பு

salary
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
மேலும் இந்த அடிப்படையில் கடந்த ஜூலை 2022ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது