வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (13:25 IST)

இதை செய்யாவிட்டால் பான் கார்ட் ரத்து: மத்திய அரசு கரார்!!

2017 டிசம்பர் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் இல்லையெனில் பான் கார்ட் ரத்து செய்யப்படும்  என மத்திய அரசு அறிவித்துள்ளது.


 
 
அமெரிக்கா போன்று இந்தியாவிலும் ஆதார் எண்ணை ஒரே அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
எனவே, மத்திய அரசின் சேவைகள், நலத்திட்டங்கள் என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. 
 
தற்போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கால வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதனை செய்ய தவறினால், பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆதார் அட்டை மட்டுமே ஒரே ஒரு அடையாள அட்டையாக மாறக்கூடியதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.