ஆதார் கட்டாயமே: முடிவில் மாறாத மோடி அரசு!!
ஆதார் கட்டாயம் அல்ல என உச்ச நீதிமன்றம் கூறினாலும், இதை கண்டுக்கொள்ளாமல் ஆதார் கட்டாயம் என்பதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது மோடி அரசு.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும், ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. ஆதார் அட்டையை பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில், அரசின் மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆதார் கட்டாயம் என்பதாற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்திருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.