திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (18:04 IST)

அதிகரிக்கும் பாதிப்புகள்; தடுப்பூசி முகாம் நடத்த அனுமதி! – மத்திய அரசு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளன. இதனால் பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்கள், அலுவலகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்பு தற்போது உள்ளபடியே 45க்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நிலை தொடரும் என்றும், ஏப்ரல் 11 முதல் இந்த முகாம்களை நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.