வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (08:59 IST)

விமான நிலையங்களில் பிராந்திய மொழி – கட்டாயமாக்கிய மத்திய அரசு

விமான நிலையங்களில் அந்தந்த மாநில மொழிகளும் கட்டாயம் இடம்பெற வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடு விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளே அறிவிப்பு மற்றும் பெயர்ப் பலகைகளில் இடம்பெறுகின்றன. இதனால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாத அந்த  பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்தந்த ஊர் விமான நிலையங்களில் மாநில மொழிகள் இடம்பெற வேண்டுமெனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதை ஏற்ற விமான நிலையங்கள் ஆனையம் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியிலும் அறிவிப்பு வெளியாக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அது முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மத்திய அரசு விமான நிலையங்களுக்கு இந்த உத்தர்வை மீண்டும் பிறப்பித்துள்ளது. மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ள அறிக்கையின் படி அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் இது தனியார் நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.