1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (13:19 IST)

நீட் தேர்வு முறைகேடு: எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரணையா?

NEET
நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களிடம் மட்டும் இன்றி இதற்கு முந்தைய ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதி தற்போது எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமும் விசாரணை செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முதல் முறை நீட் தேர்வு எழுதி மிக மோசமான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த முறை நீட் தேர்வு எழுதிய போது மிகவும் நல்ல மதிப்பெண் பெற்று தற்போது சில மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
அவர்கள் உண்மையிலேயே நன்றாக படித்து நீட் தேர்வை நன்றாக எழுதினார்களா? அல்லது வேறு ஏதேனும் முறைகேடு செய்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
இந்த விசாரணை மூலம் ஏற்கனவே முறைகேடு செய்து நீட் தேர்வு எழுதி பாஸ் ஆனவர்களும் பிடிபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran