வீட்டில் வளரும் பூனை கர்ப்பம்.. நலங்கு வைத்து வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி...
வீட்டில் குடும்பத்தினரும் ஒருவராக வளர்க்கப்படுவது நாய்,பூனைகள்தான்.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூலக்குளத்தில் வசித்து வருபவர் வசந்தா.
அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணியான பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதற்கு அருகில் உள்ளவர்களை அழைத்து வந்து வளைகாப்பு மற்றும் நலங்கு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
தடபுடலான நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூனைக்குப் பிடித்த உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே பூனை தாயாகி 4 குட்டிகளை ஈன்றுள்ளது .