சபரிமலை போராட்டம்: 200 பக்தர்கள் மீது வழக்குப்பதிவு
சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவிலுக்குள் செல்ல முயற்சித்த கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் போராட்டம் நடத்திய 200 பக்தர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.