நண்பரின் மகளை கற்பழித்து கொலை செய்த தொழிலதிபர்
திருவனந்தபுரம் அருகே நண்பரின் மகளை கடத்தி, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்து ஆரன்முளா பகுதியைச் சேர்ந்த விசுவாம் பரன் என்பவரின் வீடு அருகே காதர் யூசப் வசிந்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
விசுவாம் பரன் என்பவரின் மகள் அசுவதியும்(20) காதர் யூசப் நன்றாக பழகி வந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் அசுவதி காணாமல் போக, காதர் யூசப் மற்றும் விசுவாம் பரன் இருவரும் சேர்ந்து சென்று காவல் நிலையத்தில் அசுவதியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் ஆரன்முளா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தோட்டத்தில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டது.
அந்த பெண்ணின் முகம் சிதைந்து இருந்ததால் காவல் துறையினரால் அடையாளம் காண முடியவில்லை. பிணம் இருந்த இடத்தில் பார்சல் பேப்பர் ஒன்று இருந்துள்ளது. அதைக்கொண்டு விசாரணை நடத்தியத்தில் அந்த பார்சல் பேப்பர் காதர் யூசப் வீட்டுக்கு வந்தது என தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் காதர் யூசப்பிடம் ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் காதர் யூசப் கூறியதாவது:-
அசுவதி அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். அசுவதியும் நானும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்தோம். அவர் கர்ப்பமானார், அதை என்னிடம் கூறி திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தினார். நான் ஒப்புக்கொள்ளாமல் அசுவதியை கொல்லத்துக்கு அழைத்து சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்து, கர்ப்பத்தை கலைக்க சொன்னேன்.
அசுவதி கருவை கலைக்காமல் வேலையையும் ராஜினாமா செய்து விட்டு என் வீட்டிற்கு வந்தார். அவரை ஒரு மாதம் வீட்டிலேயே அடைத்து வைத்தேன். அது அவரது தந்தை விசுவாம் பரனுக்கு தெரியாது.
பின்னர் எனது மனைவி அரபு நாட்டில் இருந்து வருவதாக தகவல் வந்தது. அதனால் அசுவதியை கொலை செய்து விட்டேன்.