வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 நவம்பர் 2024 (14:27 IST)

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

supreme court
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புல்டோசர் மூலம் சொத்துக்களை இடிப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இனிமேல் சொத்துக்களை இடிப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் கூறி இருப்பதாவது:
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் என்பதற்காக மட்டுமே மக்களின் வீடுகள் இடிக்கப்படுமானால் அது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதித்துறையின் பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க இயலாது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தாலும் கூட வீடுகளை இடிக்கக் கூடாது.
 
குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வீடுகளை இடிப்பது, ஒரே இரவில் தெருவில் பெண்கள், குழந்தைகளை பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியாக இல்லை.
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு சில உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் வெளிச்சத்தில் பாதுகாப்புகள் உள்ளன.
 
பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கோர்ட்டால் இடிப்பு உத்ரதரவு பிறப்பிக்கப்பட்டாலோ அதன் உத்தரவுகள் இதற்கு பொருந்தாது.
 
முன் அறிவிப்பு இல்லாமல் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது. இடிப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியா முழுவதற்கும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.   
 
 
 
Edited by Siva