லக்னோவில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 155.2 மிமீ மழை பெய்துள்ளது. அதாவது அங்கு ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி ம்ழை ஒரே நாளி கொட்டித் தீர்த்துள்ளதால், இதுவரை லக்னோவில் மட்டும் 197 மி.மீ மழை அளவு பெய்துள்ளது.
இதனால், லக்னோ முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள தில்குஷா பகுதில் உள்ள ராணுவக் குடியிருப்பை ஒட்டியிருந்த தொழிலாலர் குடிசைகள் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். 2 பேருக்கு கடுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், கட்டிட இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்துள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.