BSNL மூடப்படுகிறதா... அரசு தரப்பு கூறும் பதில் என்ன??
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடப்படுகிறதா என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது, தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது.
இவறை புத்துயிரூட்டும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்நிறுவனங்களின் நிலம், மற்ற சொத்துகள் உச்சபட்ச அளவில் பயன்படுத்தப்படும். இந்த இரு நிறுவனங்களும் மூடப்படாது என்று அவையில் நான் உறுதியளிக்கிறேன்.
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கின் தொலைத்தொடர்பு கோபுரங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இதன் மூலம் வருவாய் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.