திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (07:40 IST)

திருமண தினத்தன்று மாயமான மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கன்னியாகுமரி அருகே திருமணம் நடக்க ஒருசில மணி நேரங்களுக்கு முன் திடீரென மாயமான மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று ஒரு திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாயமான மணமகன் சதீஷின் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒருசிலர் ஒட்டினர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சதீஷ் மாயமானது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாயமான சதீஷை மீட்டு தரவும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.