1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)

ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

பீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


 


 
பீகார் மாவட்டத்தில் கே.ஜி.ஹில்லி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 11 சிறுவர்களை, காவல்துறை நேற்று மீட்டுள்ளது. அவர்கள் 4 வருடத்திற்கு முன்பு அங்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும், ஒருநாளைக்கு அவர்கள் 1200 காலணிகள் செய்ய வேண்டும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...