ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Bharathi| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (09:57 IST)
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த  ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
ஹவுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே போலீஷுக்கு தகவல் கிடைத்தது.
 
இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு  வெடிகுண்டு செயலிழக்கவைக்கவும் நிபுணர்கள் குழு அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர்.
 
அப்போது ஒரு ரயில்பெட்டியின் இருக்கைக்கு அடியில் சிலிண்டருக்குள் வெடிக்குண்டு பொறுத்தப்பட்டிருந்ததை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை நிபுணர்கள் குழு செயலிழக்க வைத்தது. ரயில்பெட்டியில் வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்த அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஹவுரா ரயில்நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :