காஷ்மீரில் குண்டுவெடிப்பு....15 பேர் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் நகரில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 10 ற்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் உதம்பூர் காரிஸ் நகரில் சாலையோரத்தில் உள்ள நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிகுண்டு வெடித்தது. இதில்,ஒருவர் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சலாத்தியா சவுக் என்ற ஒரு சிறிய பூங்காவிற்கு அருகில் மக்கள் தங்கள் கிராமத்திற்குச் செல்வதற்காக மினிபஸ்ஸுக்காக காத்திருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.