திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 ஜனவரி 2020 (09:12 IST)

கெஜ்ரிவாலை கிண்டலடித்த பாஜக! அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா? – கடுப்பான சிவசேனா!

டெல்லியில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சத்ரபதி சிவாஜி குறித்த வீடியோவில் மோடியை இணைத்து பாஜக செய்த எடிட்டுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சத்ரபதி சிவாஜியின் முக்கியமான போர் தளபதிகளில் ஒருவர் தன்ஹாஜி. இந்தியில் அஜய்தேவ்கன் நடித்து தன்ஹாஜி என்ற பெயரிலேயே வெளியாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த படத்தின் சில காட்சிகளை எடுத்து சத்ரபதி சிவாஜியை பிரதமர் மோடியாகவும், தன்ஹாஜியை அமித்ஷாவாகவும், வில்லன் கதாப்பாத்திரமான உதய்பான் சிங் ரத்தோரை அரவிந்த் கெஜ்ரிவாலாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர் டெல்லியை சேர்ந்த பாஜகவினர்.


அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டல் செய்ய வெளியான இந்த வீடியோவை பார்த்து சிவசேனா கட்சியினர் கடுப்பாகி உள்ளனர். ஏற்கனவே சத்ரபதி சிவாஜியையும், மோடியையும் இணைத்து பாஜகவினர் எழுதிய புத்தகத்துக்கு சிவசேனா கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அதே போல தொடர்பு செய்யப்பட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் “தொடர்ந்து சிவாஜியின் பெயரை தவறான வழிகளில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறியுள்ளார்.