வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (18:54 IST)

மக்களவை தேர்தலுக்கான பாஜக மையக்குழு கூட்டம் !

டெல்லியில் மக்களவை தேர்தலுக்கான பாஜக  மையக்குழு கூட்டம் பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
விரைவில்  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகளும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில கட்சிகளும் கட்சிகளும் இத்தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
ஏற்கனவே பல கட்சிகள் கூட்டணி பற்றியும் தொகுதிப் பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில் டெல்லியில் மக்களவை தேர்தலுக்கான பாஜக  மையக்குழு கூட்டம் பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான  பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உத்தேசமாக 100 முதல் 120 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும், இந்தப் பட்டியலில் திரு நெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பெயர் இடம்ப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.