திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:36 IST)

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

கிஸ் 'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தது மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது என்று பாஜக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்தின தாக்குதலில் ஹஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா ,  ஹிஸ்புல்லா   தலைவர் ஹசன் நஸ்ருல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் உயிர் தியாகம் செய்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் பாஜக இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கவிந்தர் குப்தா இதுகுறித்து கூறியபோது, "'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது?, வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது அவர் ஏன் மௌனம் சாதித்தார்?" என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva