புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:26 IST)

ஒரே வாரத்தில் மீண்டும் பிரச்சனை: நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல்!

Nitiesh
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி எதிர் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி அமைந்த ஒரே வாரத்தில் நிதிஷ்குமார் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பீமா பாரதி என்பவர் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்ற நிலையில் பீமா பாரதி மிகவும் அதிர்ச்சியடைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நாங்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லையா? என கேள்வி எழுப்பி உள்ள பீமா பாரதி நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
புதிய அரசு அமைந்த ஒரே வாரத்தில் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே மிரட்டல் விடுத்து இருப்பதால் நிதிஷ்குமார் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.