திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (11:28 IST)

விருப்பம் இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுங்கள்: ரஜினி நண்பரை வெளுத்து வாங்கிய துணை முதல்வர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சத்ருஹன்சின்ஹா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனால் பாஜக எம்பியாக இருந்தாலும் அவ்வப்போது பாஜக ஆட்சியையும் பிரதமர் மோடியையும் இதர பாஜக தலைவர்களையும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான சுசில்குமார் மோடி, சத்ருகன் சின்காவின் தொடர் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'சத்ருஹன்சின்ஹா கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் எம்பி பதவியை அனுபவித்து கொண்டு கட்சியை விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். அவருக்கு பாஜகவில் தொடர விருப்பமில்லாவிட்டால் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்கா தற்போது எம்பியாக உள்ள பாட்னாசாகிப் தொகுதியில் இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் சுசில்குமார் மோடி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.