செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:07 IST)

கொரோனாவுக்கு பீஹார் மாநில தலைமைச் செயலாளர் பலி!

கொரோனாவுக்கு பீஹார் மாநில தலைமைச் செயலாளர் பலி!
இந்தியா முழுவதும் கொரனோ இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு பல பிரபலங்கள் அவ்வப்போது பலியாகி கொண்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இன்று கூட தமிழகத்தில் கேவி ஆனந்த் அவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பீகார் மாநில தலைமைச் செயலாளரே கொரோனாவுக்கு பலியாகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் என்பவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் அருண்குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரை பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது