செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (20:55 IST)

ஐசியூவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு தினமும் ரூ.5000: முதல்வர் அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் பல்வேறு உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி அரியானா மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் 
 
இந்த நிதி உதவி மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை மேற்கொள்ளவும் அவருடைய குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் உதவும் என்று அவர் அறிவித்துள்ளார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்களின் இந்த அறிவிப்பு அம்மாநில மக்களை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக்கியுள்ளது. இதேபோல் மற்ற மாநில முதல்வர்களும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது