புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (12:35 IST)

ஒமிக்ரானோடு வந்த நபருக்கு போலி கொரோனா சான்றிதழ் – பெங்களூரில் 4 பேர் கைது!

பெங்களூரில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பயணிக்கு போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து தந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பாதிப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த பயணிகள் சிலருக்கு போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வழங்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போலி சான்றிதழ் வழங்கியவர்களில் ஒரு பயணிக்கு தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.