வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:57 IST)

இன்று பாரத் பந்த் - விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் மாநிலங்கள்!

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்படுகிறது. 

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
நாடு முழுவதும் இன்று 10 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது காலை 6 மணிக்கு துவங்கியது. ஆம், தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் இயங்காமல், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு போராட்டம் நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.