வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகார கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுதல், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணுதல், ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்டிஹ் வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மேலும் வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், திங்கட்கிழமை 27 ம் தேதி ஸ்டிரைக் என்பது குறிப்பிடத்தக்கது.