ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:26 IST)

பெங்களூரு வெள்ளம்: மின்சாரம் தாக்கி 23 வயது இளம்பெண் உயிரிழப்பு!

dead22
பெங்களூரு வெள்ளம்: மின்சாரம் தாக்கி 23 வயது இளம்பெண் உயிரிழப்பு!
பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்வதை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மின்சாரம் தாக்கி இருபத்தி மூன்று வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெங்களூரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்ததை அடுத்து அங்கு நகர் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. இதனை அடுத்து இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் டிராக்டரில் ஏறி ஐடி நிறுவன ஊழியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வைல்ட் பீல்ட் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தை அகிலா என்ற 23 வயது இளம்பெண் தள்ளிக்கொண்டு சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது அருகில் இருந்த மின் கம்பத்தில் பிடித்தார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது