செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (11:31 IST)

மேம்பாலத்தில் மலர்ந்த காதல்: திருமணம் முடிந்து ஆண்டுகள் ஆகியும் மேம்பாலம் முடியவில்லை!

bangalore
மேம்பாலத்தில் மலர்ந்த காதல்: திருமணம் முடிந்து ஆண்டுகள் ஆகியும் மேம்பாலம் முடியவில்லை!
பெங்களூரில் மேம்பாலம் கட்டிக்கொண்டு இருந்த போது தங்கள் காதல் மலர்ந்ததாகவும்,  தனக்கு தற்போது திருமணம் ஆகி 5 வருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அந்த மேம்பாலத்தின் பணி முடியவில்லை என்றும் ஒரு தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் 
 
பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடும் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று காதலித்து திருமணம் செய்த ருசிகர தகவல்களை வெளியிட்டுள்ளது 
 
பெங்களூரில் உள்ள சிக்னல் ஒன்றில் எங்களது முதல் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அப்போது அதன் அருகே மேம்பால கட்டுமான பணி நடந்து வந்ததாகவும் ஐடி பணியாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 
 
நாங்கள் காதலித்து தற்போது திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்றும் ஆனால் இன்னும் மேம்பாலம் கட்டுமான பணி முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த பதிவிற்கு ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். பெங்களூர் போக்குவரத்தின் மோசமான நிலை குறித்து அனுபவங்களையும் பலர் பகிர்ந்துள்ளனர் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது