1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (16:07 IST)

பத்திரிக்கையாளர்களின் கார் தாக்குதல்;போராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி-சபரிமலை அப்டேட்

சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் கார் நிறுத்தி தாக்கப்பட்டுள்ளது சபரிமலையில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் ஆளும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து பெண்பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

 
காலையில் இருந்தே கோவிலுக்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு பெண்பக்தர்களைத் திருப்பி அனுப்புதல் மற்றும் அவர்கள் காலில் விழுந்து திருப்பி அனுப்புதல் போன்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களின் கார்களைத் தாக்கி அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.

இன்னும் ஒருமணிநேரத்தில் கோவிலின் நடை திறக்கப்பட உள்ளதால் பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் பரபரப்பான் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர்.