”ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினர்..” மாணவர் சங்கத் தலைவர் பகீர்
டெல்லி ஜேஎன்யூ பலகலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், “எங்களை ஏபிவிபி மாணவர்கள் தான் தாக்கினார்கள் என கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்குள்ளான ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷ், “இது திட்டமிட்ட தாக்குதல், ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை விடுதிக்குள் நுழைந்து தாக்கினர். தாக்குதலின் போது அவர்களின் பெயர்களை சொல்லியே தாக்கினர்” என பேட்டியளித்துள்ளார்.