வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (09:12 IST)

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 13 நாட்கள் விடுமுறை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கிகள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை என்ற நிலையில் இந்த மாதம் கூடுதலாக சில நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த முழு விவரங்கள் இதோ:

ஆகஸ்ட் 4 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 3- கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் பாத் (சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

ஆகஸ்ட் 10 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 11 - ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை

ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை)

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்  விடுமுறை

 ஆகஸ்ட் 18 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 19 - ராக்கி பண்டிகை ( உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் விடுமுறை )

ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சி வங்கிகளுக்கு விடுமுறை)

ஆகஸ்ட் 24 - நான்காவது சனிக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 25 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 26 - கிருஷ்ண ஜென்மபூமி  விடுமுறை.

Edited by Siva