செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (22:21 IST)

சட்டசபைத் தேர்தல்: நாகலாந்தில் 74.82% , மேகாலயாவில் 82% வாக்குகள் பதிவு

வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மேகாலயா,  நாகலாந்து ஆகிய இரு மா நிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனவே, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இதற்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டனர்.

இரு மா நிலங்களிலும் தலா 60 தொகுதிகள் இருப்பதால், இன்று, அறிவிக்கப்பட்ட படி காலை முதல் தேர்தல் நடந்த நிலையில் மாலையில் தேர்தல் நிறைவடைந்தது.

 நாகலாந்தில், 13.7 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், 59  தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1 தொகுதியில் போட்டியின்றி பாஜக வென்றது.

இங்கு 74.82 % வாக்குப் பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேகாலயாவில், 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையி, 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய மக்கள் கட்சி 57 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும், போட்டியிட்டனர். இங்கு 82% வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.