நம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை.. அசாம் முதல்வர் அதிரடி..!
அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என அசாம் முதல்வர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாமில் மாநில அரசு வேலை குறித்து புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதன்படி அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த தகவலை தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மற்ற மாநிலங்களில் இருந்து அசாம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அசாம் மாநிலத்தில் மட்டும் பிறந்தவர்களுக்கு வேலை அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை பழங்குடியினராக அங்கீகரிக்க சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் சட்டவிரோதமாக அசாமில் குடியேறுவதை தடுக்கலாம் என்றும் பழங்குடி இன மக்களின் நலன்களை பாதுகாக்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க, அசாம் மாநிலம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva