செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (18:20 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு..! ஆம் ஆத்மி தகவல்.!

arvind kejriwal
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை  பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 
 
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக  ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. 

 
55 வயதான அவர் ஒரு நீரிழிவு நோயாளி மற்றும் அவரது இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கமாக உள்ளது என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கெஜ்ரிவாலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 46ஆக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.