செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (12:30 IST)

ED தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால்..! மார்ச் 16-ல் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!

arvind kejriwal
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 
 
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. 
 
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 
 
இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
 
இதை அடுத்து மார்ச் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.