வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:35 IST)

அருண் ஜெட்லிக்கு சிலை..கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர்..

அருண் ஜெட்லிக்கு சிலையும், கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயரும் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 24 ஆம் தேதி, உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவர் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்பு யமுனை ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது பீகார் முதலமைச்சர் நித்தீஷ் குமார், அருண் ஜெட்லிக்கு சிலை அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி, டெல்லி கிரிக்கெட் வாரியம், டெல்லியில் உள்ள ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெட்லி மைதானம் என பெயர் வைக்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.