1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (07:59 IST)

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை.. சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்..!

டெல்லியில் காற்றின் மாசுவை குறைப்பதற்கு செயற்கை மழை பெய்ய வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.  
 
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காற்று மாசு பாதிப்பை குறைப்பதற்காக நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செயற்கை மழை பொழிய வைக்க போவதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.  
 
ஐஐடி நிபுணர்கள் இந்த திட்டத்தை டெல்லி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த பரிந்துரையை டெல்லி அரசு ஏற்றுக்கொண்டு உள்ளதை அடுத்து செயற்கை மழைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 
 
மேலும் இதற்கான உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று  செயற்கை மழை பெய்ய வழிவகை செய்யப்படும் என்றும் காற்றில் ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மேகங்கள் சூழ்ந்து இருந்தாலோ இந்த திட்டம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva