ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 12 மார்ச் 2022 (15:31 IST)

முதுகலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு

சமீபத்தில், இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர  நீட் தேர்வு கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்ட நிலையில், மருத்துவப் படிப்புகளில் முது நிலை நீட் தேர்வுக்கான கட் ஆஃப் அனைத்து வகை பிரிவினருக்கும் 15% குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம்த தேதி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத   வயது  உச்சவரம்பு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று, பொதுப்பிரிவினருக்கு 35% சதவீதமும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% சதவீதமும், ஓபிசி, எஸ்.சி. எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 25% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக  பொது சுகாதார சேவை இயக்ககம் அறிவித்துள்ளது.