கேரளாவில் காந்தாராவுக்கு தடை: எதனால் தெரியுமா??
கேரளாவின் மற்றொரு நீதிமன்றம் கன்னட திரைப்படமான காந்தாராவின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக தடை விதித்துள்ளது.
சில நாட்களுக்குப் முன்னர் கோழிக்கோடு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், கன்னட திரைப்படமான காந்தாராவின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கேரளாவின் மற்றொரு நீதிமன்றம் காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வராஹ ரூபம் பாடலின் ஸ்ட்ரீமிங்கை நிறுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
காந்தார திரைப்படத்தில் வராஹ ரூபம் எனும் பாடல் 2015 ஆம் ஆண்டு வெளியான இசைக்குழுவின் சொந்தப் பாடலான நவரசம் ஆகியவற்றுக்கு இடையே தவிர்க்க முடியாத ஒற்றுமைகள் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற இசைக்குழு குற்றம் சாட்டியது.
தயாரிப்பாளர் ஹோம்பேல் பிலிம்ஸ், எழுத்தாளர் - இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவை அனுமதித்த பாலக்காடு நீதிமன்றம், காந்தாரா மற்றும் இப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் OTT தளங்களுக்கும் இந்த தடை பொருந்தும். ஆம், Amazon, YouTube, Spotify, Wynk Music, JioSaavn மற்றும் பிறருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
காந்தாராவில் உள்ள வராஹ ரூபம் தட்சிண கன்னடத்தில் பூத ஆராதனையின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகளை சித்தரிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடத்தில் முதன் முதலில் வெளியான காந்தாரா, மாநிலங்கள் முழுவதும் மிகப்பெரிய வணிக வெற்றியைக் கண்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited By: Sugapriya Prakash