செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (13:27 IST)

சிப்ஸ், பஜ்ஜி வாங்க சைரன் அடித்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!

telungana
தெலுங்கானா மாநிலத்தில் ஆல்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சிப்ஸ், பஜ்ஜி வாங்க ஆம்புலன்ஸ்ஸின் சைரன் அடித்துச் சென்ற வீடியோ பரவலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தெலுங்கானா  மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஐதராபாத் நகரில் பஷீர்பாக் பகுதியில் திங்கட்கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சரைன் ஒலித்தபடி சாலையில் வேகமாகச் சென்றுள்ளது.

இதையடுத்து,பிரதான சாலையில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் இருவர் அங்கு நின்றிருந்த வாகனங்களை இயங்கி, ஆம்புலன்ஸிற்கு வழிவிட ஏற்பாடு செய்திருக்கிறார்.

அந்த ஆம்புலன்ஸ் விபத்து பகுதிக்கோ, மருத்துவமனைக்கோ செல்லாமல் சாலையோரம் இருந்த உணவகத்தின் முன் சென்று நின்றுள்ளது.

இந்த ஆம்புலன்ஸில்  நோயாளி யாருமில்லை என்றும் சைரன் ஒலித்தபடி சென்றுள்ளார்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் அவரமில்லாதபோது, சைரன் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

தன் சொந்த தேவைக்காக சைரன் ஒலித்து, போக்குவரத்து விதியை மீறியதுடன் அதை மறைக்கவும் முயற்சித்துள்ளார்.

இதை சாலையில் சிக்னைல் நின்றிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர்   கவனித்துள்ளார்.

இதுபற்றி ஆம்புலன்ஸ் டிரைவரிடம் காவலர் விசாரணை செய்து, உங்கள் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.