வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (16:22 IST)

எல்லோரும் பயன்படுத்துவதால் இந்த முடிவை எடுக்கிறோம் – அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு !

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமேசான் ப்ரைம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் பொழுதுபோக்கிற்காக இணையத்த அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலரும் இணையத்தை பயன்படுத்துவதால் ஹேங்க் ஆகாமல் இருக்க, அமேசான் ப்ரைம் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 வரை எச்டி தரத்திலான வீடியோக்களைப் பார்க்க முடியாது என அறிவித்துள்ளது.